Top News

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைப்பேன் - அனுரகுமார

 

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைப்பேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

டெய்லி எஃப்டியிடம்  இதனை தெரிவித்துள்ளஅனுரகுமாரதிசாநாயக்க தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் அதிகாரத்தைப் பாதுகாப்பதும் அதிகாரத்தை நிலைநாட்டுவதும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதிக்குவழங்கப்பட்ட அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி செப்டம்பர் 22 அன்று நாடாளுமன்றத்தைக் கலைக்க தேசிய மக்கள் கட்சி விரும்புகிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில்  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்

 "இந்த ஊழல்வாதிகளுடன் ஒரு நாள் கூட சேர்ந்து செயற்படவிரும்பவில்லை அதற்கான காரணங்களும் இல்லை . புதிய அமைச்சரவை மற்றும் செயலாளர்களை நியமிக்கும் அரசியலமைப்பு அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது மேலும் செப்டம்பர் 22 அன்று தலைவர் அனுர குமார திசாநாயக்க நம் நாட்டிற்கு சிறந்த முடிவை எடுப்பார். தேவையான ஏற்பாடுகளுடன் நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம் "என அவர் தெரிவித்துள்ளார்.

என். பி. பி. யின் தலைமையின் கீழ் தற்போதுள்ள அமைச்சரவை மற்றும் பிரதமர் உடனடியாக நீக்கப்படுவார்கள் என்றும் தேவையான அனைத்து சட்ட ஆலோசனைகளும் ஏற்கனவே

இடம்பெற்றுள்ளன எனவும்  என்றும் அமரசூரியாதெரிவித்துள்ளார்.

 இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது பற்றிய எந்தவொரு பேச்சையும் மேலும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் முயற்சி என்று நிராகரித்துள்ளார்.

. பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஹரிணி அமரசூரிய ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி பிரச்சாரத்தை விமர்சித்துள்ளார். இது குழப்பத்தை உருவாக்குவதை மையமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்

விக்கிரமசிங்கவின் சமீபத்திய அறிக்கைகள் குறித்து கேட்டபோது நெறிமுறைக் கொள்கைகளை நிலைநிறுத்தும் ஒரு அமைச்சரவையை நியமிக்கும் அவரது திறனை அவர் கேள்வி எழுப்பியதுடன் "அவர் தேரவாத பொருளாதாரத்தைப் பற்றி பேசியுள்ளார் ஆனால் அதற்கு முன்இ ஐந்து கட்டளைகளைப் பின்பற்றக்கூடிய ஒரு அமைச்சரவையை நியமிக்கும்படி அவரிடம் கேட்கப்பட வேண்டும்".என்றும் அமரசூரியாதெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post