Top News

முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் மற்றும் உலமா சபைக்கு இடையில் சந்திப்பு


 2024.09.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர், அதிகாரிகள் ஆகியோரிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம். ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் அதன் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.


இச்சந்திப்பில்; நாடு, சமூகம் என்ற ரீதியில் ஜம்இய்யாவின் கடந்தகால பணிகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகளில் எவ்வாறு இருதரப்பும் இணைந்து, புரிந்துணர்வோடு செயலாற்றுவது என்பது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.


குறித்த கலந்துரையாடலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சார்பில் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், பிரதிப் பணிப்பாளர் என். நிலோபர் மற்றும் திணைக்கள அதிகாரி எம்.எம்.எம். முஃப்தி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் ஆகியோருடன் உப தலைவர்கள், ஏனைய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post