Top News

கிளப் வசந்த படுகொலை; தோட்டாக்களில் KPI என அடையாளமிட்டது ஏன்?; 17 ஆவது சந்தேக நபரிடம் 48 மணி நேர தடுப்புக் காவல் விசாரணை

( அம்னா இர்ஷாத்)

 அத்துருகிரிய  பச்சை குத்தும் அழகுக்கலை  நிலையத்தில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில்  கொல்லப்பட்ட கிளப் வசந்த எனும்  சுரேந்ர வசந்த பெரேராவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 17 ஆவது சந்தேக நபரிடம் 48 மணி நேர தடுப்புக் காவல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்த தர்கா நகரைச் சேர்ந்த 24 வயதான குறித்த சந்தேக நபரை கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்து பெற்றுக்கொண்ட  தடுப்புக் காவல் அனுமதியின் கீழ் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 குறிப்பாக இந்த சந்தேக நபரிடம், கிளப் வசந்தவை கொலை செய்ய பயன்படுத்தபட்ட தோட்டாக்களில் KPI என அடையாளபிடப்பட்டமை தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது. இதனைவிட  கொலை ச‌ந்தேக நபர்கள்  தங்கியிருந்த்த அத்துருகிரிய கல்பொத்த வீதி வீட்டுக்கு சென்று அவர்களை அங்கிருந்து அழைத்து செல்லவும் இச்சந்தேக நபர் உதவியதாக கூறும் பொலிசார் அவரிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுப்பதாக கூறினர். 

இதுவரை இச்சம்பவம் தொடர்பில்  பெண் ஒருவர் உள்ளிட்ட 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள  அவர்களில் நிலையில் 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 4 பேர் 3 மாத தடுப்புக் காவலின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இறுதியாக கைது செய்யப்பட்ட நபர் 48 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post