இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான 108 வாகனங்கள் தற்போது அங்கு இல்லை என இலங்கைத் தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் வெளிவந்துள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 128 வாகனங்கள் காணப்படும் நிலையில், அதில் 108 வாகனங்கள் தொடர்பில் எதுவித ஆதாரங்களும் தணிக்கை அலுவலகத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
இதேவேளை, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் போக்குவரத்து மற்றும் கணக்குப் பிரிவு ஆகியவற்றில் உள்ள 444 வாகனங்களில் 82 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை.
அவ்வாறு பதிவு செய்யப்படாத வாகனங்களின் மதிப்பு 140,135,000 ரூபாய் ஆகும்.
சிவில் பாதுகாப்பு திணைக்களம் தொடர்பாக 2023 ஆம் ஆண்டுக்கான செயல்திறன் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்தத் தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment