முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஸ்குவலின் வங்கிக் கணக்குகளை முடக்கியது நீதிமன்றம்

Ceylon Muslim
0

அம்னா இர்ஷாத்

ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக‌ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுப பஸ்குவலின் சில வங்கிக் கணக்குகளை 3 மாதங்களுக்கு இடைநிறுத்த மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே நேற்று (10) உத்தரவிட்டார்.

அதன்படி எதிர்வரும் 2025 ஜனவரி 4ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 53 (4) சரத்திற்கமைய குறித்த வங்கிக் கணக்குகளின் ஊடாக எந்தவொரு கொடுக்கல் – வாங்கலையும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மேற்கொள்ள முடியாது என நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top