அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளராக சந்தியா நியமனம்

Ceylon Muslim
0

 


அம்னா இர்ஷாத்

அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளராக சந்தியா குமுதினி ராஜபக்ஷவை நியமிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளராக கடமையாற்றிய தீபிகா செனவிரத்ன 2024.10.11 ஆம் திகதி ஓய்வுபெற்றுள்ளார்.
இந் நிலையிலேயே ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சந்தியா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தர அதிகாரிகளின் மூப்புப் பட்டியலின் படி முன்னிலையில் இருக்கும், தற்போது அரசாங்க மேலதிக இரசாயன பகுப்பாய்வாளர் பதவியில் கடமையாற்றி வரும் பத்திரகே சந்தியா குமுதுனி ராஜபக்ஷவை நியமிக்க உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் எனற‌ ரீதியில் பிரதமர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top