ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதோடு மலர் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

Ceylon Muslim
0

ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று  (06) நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென். செபஸ்தியன் தேவாலயத்தில் கலந்துரையாடியதோடு, கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கும் மலர் அஞ்சலி ஜனாதிபதி அனுர குமார திசா நாயகவால் செலுத்தப்பட்டது 


இந்நாட்டில் அண்மைய காலத்தின் மிக மோசமான அழிவு 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே நிகழ்ந்தது என்றும் அந்த விடயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று அவர் உறுதியளித்ததோடு, ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எனக்கு வாக்களித்ததன் பின்னணியில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்ததென நம்புகிறேன். என்றும் தெரிவித்தார் 


இந்நாட்டு மக்களின் நோக்கங்களும், எதிர்பார்ப்புக்களும் தான் கொண்டிருக்கும் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு மாறுபட்டவை அல்லவெனவும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து மக்கள் எதிர்பார்க்கும் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என்றும் எதிர் பார்க்கிறார் என்றும்,  அதற்கான முன்னெடுப்புக்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


அடுத்தபடியாக, 274க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை பறித்த மற்றும் பெருமளவானவர்களை காயத்துக்கு உள்ளாக்கிய அழிவினால் பாதிக்கப்பட்டவர்கள்  தமது அன்புக்குரியவர்கள் மீது கொண்டிருக்கும் அன்புக்கான நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும் என்றும்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top