மாத்தறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Ceylon Muslim
0

 


மாத்தறை – ருவன்வெல்ல பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

காரில் வந்த அடையாளம் தெரியாத‌ துப்பாக்கிதாரிகள் நேற்று மாலை குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மாத்தறை – கோட்டை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவரெனத் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top