இம்முறை நடைபெறப் போகின்ற பாராளுமன்றத் தேர்தலில் கடந்த பாராளுமன்றத்தில் எமக்கு முஸ்லிம்கள் 22 பேர் இருந்தனர். அதே போன்று நாளை மறுதினம் நடைபெறப் போகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எமது இன விகிதாசாரத்திற்கேற்ப 23 உறுப்பினர்களையாவது நாம் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புதல் வேண்டும்.
அதற்காக இலங்கை வாழ் முஸ்லிம்கள் நன்கு சிந்தித்து அலசி ஆராய்ந்து செயல்படுதல் வேண்டும். வெறுமனவே சொற்ப சலுகைகள், சன் மானத்திற்காக நாம் சோரம் போகக் கூடாது.
எமது தொகுதி வாழ் மக்களின் அன்றாட பிரச்சனைகள் எமது பிரதேச அபிவிருத்திக்கு அரச நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் எமது கல்வி, தொழில்,காணி,விவசாயம், வாழ்வாதாரம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் எழுப்புவதற்கும் எமது பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஆற்றல், அறிவு நிர்வாகம், மும்மொழி ஆற்றல் அனுபவம்,கொண்ட நல்ல தலைமைத்துவம் கொண்ட வரும் நம் மக்களுக்கு தன்னையே அர்பணிப்பவறையே நாம் தெரிபு செய்ய வேண்டும்
;
எமது மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திலும், எதிர்கட்சியில் நமக்கு எதிராக கொண்டு வரும் தீர்மாணங்கள், அரசியலமைப்புச் சட்டங்கள் மத இன பிரச்சினைகள் முன்கூட்டியே அது தடுக்கக் கூடிய வரும் அதற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி அதனைத் தடுக்க கூடியவராக இருத்தல் வேண்டும். வெறுமனவே அரச நிதி அபிவிருத்தி மட்டுமல்லாது வெளிநாட்டுத் திட்டங்களை வகுத்து எமக்கான அபிவிருத்திகளை கொண்டுவரக்கூடிய வராக இருத்தல் வேண்டும்.
நாம் தெரிவு செய்யும் பிரநிதி துணிச்சலாகவும், நம் உரிமைகளை பெற்றுக் கொடுத்தவர், இனப்பற்று, மதப்பற்று, நாட்டு பற்றுக் கொண்டவர்கள் நாம் தெரிவு செய்தல் வேண்டும்;, நீங்கள் ஒருபோதும் கட்சி,நிறம், பிரதேசம் குடும்பம் வசதி வாய்ப்பு போன்றவற்றைப் பாராது . நன்கு சிந்தித்து செயல்படுங்கள்
எமது விகிதாசாரத் தேர்தலில் மைய வெறும் நாம் வாக்குகளை இட்டு பெரும்பான்மையினர் பாராளுமன்றம் செல்வதற்கு வாக்கு அளித்துவிட்டு விருப்பு வாக்குகள் குறைவினால் நாம் பாராளுமன்ற பிரதிநிதியை இழக்கக் கூடாது.
ஆகக்குறைந்தது. இலங்கை வாழ் முஸ்லிம்களின் சனத்தொகை கேற்ப திகாமடுல்ல வில் மாவட்டத்தில் 3 பேர் மூன்று தொகுதிக்கும் 1 ஆசனம் போனஸ் உட்பட 4 பிரதிநிதிகள் ,
கொழும்பு மாவட்டத்தில் 3 பிரதிநிதிகள், களுத்துறையில் 1 பிரதிநிதி, புத்தளம் 1 மட்டக்களப்பு 2, திருகோணமலையில் 2;, வன்னியில் 2 ;, குருநாகல் 1, கண்டியில் 2 ;,அநூரதபுரம் 1, கம்பஹா 1 கேகாலை 01
இதனைவிட தேசிய பட்டியலில் 4 பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும்.
Post a Comment