சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை - கொழும்பு மேல்நீதிமனற்றம் தீர்ப்பு

NEWS
0


 இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது.

2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து உதிரி பாகங்களை விடுவிப்பதற்காக பஞ்சிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 125 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒவ்வொரு பிரதிவாதிகளுக்கும் தலா 125 மில்லியன் ரூபா அபராதம் விதிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்ல உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top