பொதுத் தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 70,000 பொலிஸ் அதிகாரிகள்- நாளை முதல் ஆரம்பம்

NEWS
0

பொதுத் தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 66,000 – 70,000 வரையிலான பொலிஸ் அதிகாரிகள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும் 10,000 வரையிலான பொலிஸ் அதிகாரிகளும் 12,000 வரையிலான சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளாதுடன் நாட்டின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

மேலும், இம்முறை பாரியளவான தேர்தல் வன்முறை சம்பவங்கள் இடம்பெறவில்லை என்பதுடன் பொலிஸாருக்கு இதுவரையில் 696 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியதோடு நாளையிலிருந்து பாதுகாப்பு செயற்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top