பஹ்ரியாபாயிஸ்
நவீன காலத்தில் அனைத்தும் அபிவிருத்தி அடைந்து இயந்திர மயமாக்கலுக்கு சமூகம் முன்னோக்கி செல்லும் போது குழந்தைகளை பல degree படிப்பை முடிந்துவிட்டு நன்றாக சம்பாரிக்க வேண்டும் என்பதே பெற்றோரின் நோக்கம் இதற்காக அறிவு வளர வேண்டும் என்ற எண்ணத்தில் 3+ வயதிலே பாலர் வகுப்பிற்கு சேர்த்தி விட்டு புத்தகக் கல்வியை ஆரம்பிக்கின்றனர்.
மார்க்கல்வியை பற்றி பெரிதாக எதுவும் பொறுற்படுத்துவதுமில்லை அக்கறை காட்டுவதுமில்லை. அதன் மகிமையை உணர்வதுமில்லை. இம்மைக்கு மட்டுமன்றி மறுமை வாழ்வுக்கும் பயணிக்கும் என்பதையும் அவ்வளவு மனதுக்கு எடுத்துக் கொள்வதுமில்லை.
குறைந்தது ஒரு குழந்தை அவர்களை பெற்ற எமக்கு எதுவுமென்றால் இறைவனிடம் கையேந்தி பிராத்தனை செய்யும் அளவுக்கு..
நாம் மரணித்தால் எனது உம்மாவின், வாப்பாவின் மரணத்தை நான்தான் தொழுவிக்க வேண்டும் என்றளவுக்கு..
எனது உம்மா வாப்பாவை நான் உம்ரா , ஹஜ்க்கு கூட்டி செல்ல வேண்டும்..
ஒரு தர்மத்தை சமூகத்திற்கு கொடுக்க வேண்டும்..
ஹீகு குல் இபாதவை செய்யும் அளவுக்கு..
நபியவர்கள் காட்டித்தந்த வாழ்வினை வாழும் அளவுக்கு..
சமூகத்திற்கு இஸ்லாம் மார்க்கத்தை போதிக்கும் அளவுக்கு ..
மார்கத்தோடு சக மனிதனோடு நல்ல முறையில் வாழ்வதற்கு
அந்த அளவுக்காவது ஒரு குழந்தையை மார்க்கக் கல்வியை கொடுக்க வேண்டும்.
உலகக் கல்வியை கொடுக்க கூடாது என்று கூறுவதில்லை. உலக்கல்வியை குழந்தைகளுக்கு கற்பிக்கும் அளவுக்கு மார்க்க கல்வியை கற்பிப்பதில் கரிசனை காட்டுவதில்லை என்பதே.
யா அல்லாஹ் எமது குழந்தைகளுக்கு பயனுள்ள கல்வியை கொடுத்து சமூகத்தில் நற்பிரஜைகளாக உருவாக்கிவிடு .எந்த நிலையிலும் ஈமானையும் , இஸ்லாத்தையும் கைவிட்டுவிடாமல் தினமும் படைத்தவனுக்கு துதி செய்யும் குழந்தைகளாக உருவாக்கிவிடுவாயாக.
ஆமீன்.
Post a Comment