அம்பாறை நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு சான்றுப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த ஒருதொகை தங்காபரணங்கள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் நீதிமன்றத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1998 ஆம் ஆண்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தங்காபரணங்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.