Top News

மீண்டும் மரக்கறிகளின் விலை உயர்வு!


சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நாட்களில், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் மரக்கறிகளின் இருப்பு படிப்படியாக குறைந்து வருவதால் அவற்றின் விலை உயர்வடைந்துள்ளது.

இதன்படி, மரக்கறிகளின் விலைகள் பின்வருமாறு,  

  • ஒரு கிலோ போஞ்சி  ரூ.350 - 370  
  • ஒரு கிலோ கறி மிளகாய் ரூ. 480 - 550  
  • ஒரு கிலோ கோலிபிளவர் (முட்டைகோஸ்) ரூ.400 
  • ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.330 - 380  
  • ஒரு கிலோ வெண்டக்காய்  ரூ 230,  
  • ஒரு கிலோ புடலங்காய்  ரூ.220  
  • ஒரு கிலோ தக்காளி ரூ.180 - 210 
  • ஒரு கிலோ வெள்ளரிகாய்  ரூ.100   

எவ்வாறிருப்பினும், கிழங்கு, கரட், முட்டைகோஸ் மற்றும் முள்ளங்கி போன்றவற்றின் விலைகள் 100 ரூபாவிற்கும் குறைவாக உள்ள போதிலும் அந்த மரக்கறிகள் சில்லறை விலை 200 முதல் 250 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.


Post a Comment

Previous Post Next Post