இதுவல்லவா இரகசிய தர்மம்? கள் – எலியவில் நல்லதொரு முன்னுதாரணம்

Ceylon M
0

(ஐ.ஏ.காதிர் கான்) 

கள் – எலி­யவில் இர­க­சி­ய­மான முறையில் ஜனாஸா வாகனம் ஒன்று பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட சம்­பவம் ஒன்று, கடந்த வெள்­ளிக்­கி­ழமை பதி­வா­கி­யுள்­ளது.


‘ஜனாஸா சேவைக்கு’ என்ற ஸ்டிக்கர் ஒட்­டப்­பட்ட வாக­ன­மொன்று, கள் -எலிய அல் – மஸ்­ஜிதுஸ் ஸுப்­ஹானி பெரிய ஜும்­ஆப்­பள்ளிவாச­லுக்கு முன்னால் அதன் சாவிக் கொத்­துடன், வெள்­ளிக்­கி­ழமை காலை­யி­லேயே நிறுத்­தப்­பட்­டி­ருந்த நிகழ்வு, அந்த ஊரையே பெரும் வியப்பில் ஆழ்த்­தி­யுள்­ளது.

இது தொடர்­பாக, கள் – எலிய “அல் – மஸ்­ஜிதுஸ் ஸுப்­ஹானி” பெரிய ஜும்ஆப் பள்­ளி­வா­சலில், அன்றைய தினம் வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆத் தொழு­கையின் பின்னர், பள்­ளி­வாசல் நிர்­வாகச் செய­லா­ள­ரினால் அறி­வித்தல் ஒன்று வாசிக்­கப்­பட்­டது.
அந்த அறி­வித்­தலில், “எமது பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால், இன்று (31) காலை இலவச ஜனாஸா சேவை வாகனம் என்ற ஸ்டிக்கர் ஒட்­டப்­பட்ட வாக­ன­மொன்று, அதன் திறப்­புடன் கொண்டு வந்து நிறுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இதே­வேளை, பதிவுத் தபாலில் வாக­னத்­துக்­கு­ரிய ஆவ­ணங்­களும் அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அத்­தோடு, ஒரு கடி­தமும் இணைக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்தக் கடி­தத்தில், “இந்த வாக­னத்தை, இப்­பள்­ளி­வா­ச­லுக்கு “வக்ஃப்” (பொதுச் சொத்­தாக தர்மம்) செய்­கின்றோம்” என்றும், “இவ்­வா­க­னத்தைப் பயன்­ப­டுத்த வேண்­டிய நிபந்­த­னைகள் பற்­றியும் குறிப்­பிட்­டுள்ளோம்” என்று எழு­தப்­பட்­டி­ருந்­த­தா­கவும் சுட்டிக் காட்­டினார்.

இவ்­வாறு எழு­தப்­பட்­டி­ருந்த அக்­க­டி­தமே, அன்­றைய தினம் ஊர் மக்­க­ளுக்கு வாசித்துக் காண்­பிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதில் குறிப்­பிட்டுச் சொல்­லப்­பட வேண்­டி­யது, “இந்த ஸத­காவைச் செய்­த­வர்கள், “யார் – எவர்” என்­பதை எவ­ருக்கும் தெரி­யா­ம­லேயே இர­க­சி­ய­மாக செய்­தி­ருப்­பது தான்.
பேரும் – புகழும், பெயரும் – பாராட்டும் தேடிக்­கொண்­டி­ருக்கும் இக்­கால கட்­டத்தில், இவ்­வாறு இரகசியமாக தர்மம் செய்துள்ள இச்சம்பவம், பெரும் படிப்பினையை ஊட்டிக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்லாது, அழகான தர்மம் – நல்லதொரு முன்னுதாரணமும் கூட.

👉 Ceylon Muslim WHATSAPP குழுவில் இணைய : https://chat.whatsapp.com/CL4YNSWEyHp2pt5bT7CyxA

VIDEO:

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top