அசாத் மெளலான வருவாரா? கோட்டா கைது செய்யப்படுவாரா?

Ceylon M
0

 


எப்.அய்னா

வெளி­நா­டொன்றில் அகதி அந்­தஸ்து கோரி தங்­கி­யி­ருப்­ப­தாக கூறப்­படும், மொஹம்­மது மிஹ்ளார் மொஹம்­மது ஹன்சீர் அல்­லது அசாத் மெள­லானா இலங்­கைக்கு மீள வரப்­போ­வ­தா­கவும், அவர் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்து சாட்­சியம் அளிக்கப் போவ­தா­கவும் ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. இவ்­வா­றான பின்­ன­ணியில் ஊடக சந்­திப்­பொன்­றினை நடாத்­திய முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில, கோட்­டா­பய ராஜ­பக்ஷ மற்றும் சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்­வ­தற்­காக அசாத் மெள­லா­னவை அழைத்து வர முயற்­சிகள் இடம்­பெ­று­வ­தாக தெரி­வித்­தி­ருந்தார்.
அசாத் மெள­லா­னா­வுக்கு எதி­ராக கல்­முனை நீதிவான் நீதி­மன்­றினால் பிறப்­பிக்­கப்­பட்ட வெளி­நாட்டு பயணத் தடை உத்­த­ரவு வாபஸ் பெறப்­பட்­டுள்­ள­தா­கவும், ஐரோப்­பிய நாடொன்றின் தூத­ர­கத்­துடன் பேச்­சுக்கள் இடம்­பெ­று­வ­தா­கவும் கம்­மன்­பி­லவின் கூற்றை தொடர்ந்து செய்­திகள் வைர­லா­கின.

எனினும், செனல் 4 தொலைக்­காட்­சியில் அசாத் மெள­லானா வெளிப்­ப‌­டுத்­திய விட­யங்கள் குறித்த விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த விசா­ர­ணை­களில், பிள்­ளையான் எனப்­படும் சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்­த­னிடம் பல மணிநேர வாக்குமூலங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில், அது குறித்த மேல­திக விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

அவ்­வா­றா­யினும் செனல் 4 தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்­பான ஆவ­ணப்­ப­டத்தில் அசாத் மெள­லானா குறிப்­பிட்ட உயிர்த்த ஞாயிறு தின சதி விவ­காரம் தொடர்பில் பிள்­ளை­யா­னிடம் போது­மான விசா­ர­ணைகள் இது­வரை இடம்­பெ­ற­வில்லை என்பதை சி.ஐ.டி. தக­வல்கள் அவற்றை வெளிப்­ப­டுத்­து­கின்­றன.

காரணம், அந்த விட­யங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க அசாத் மெள­லா­னாவின் வாக்குமூலம் ஒன்று அவ­சி­ய­மா­கின்­றதாம். எனினும் வேறு சில சாட்­சி­யங்­களை முன்­னி­றுத்­தியும் விசா­ர­ணை­களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தி, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தா­ரியை கண்­ட­றிய விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக விசா­ர­ணை­யா­ளர்கள் தரப்பு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

உண்­மையில் அசாத் மெள­லானா, பிள்­ளை­யானின் ஊடக செய­லா­ள­ராக அவ­ரது கட்­சியின் முக்­கி­யஸ்­த­ராக இருந்­தவர். இக்­கா­லப்­ப­கு­தி­யி­லேயே உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் சதி இடம்­பெற்­ற­தாக அவரால் கூறப்­ப­டு­கின்­றது.

பின்னர், அசாத் மெள­லானா தஞ்சம் கோரி வெளி­நாடு சென்ற‌ பின்னர், அவ­ரது மனை­வி­ய‌ரில் ஒருவர் எனக் கூறப்­படும் பாத்­திமா ஜெஸ்லி பெனாஷிர் செய்த முறைப்­பா­டொன்­றுக்கு அமைய, வெளி­நாட்டு பயணத் தடை விதிக்­கப்­பட்டு, இப்­போது அது நீக்­கப்­பட்­டுள்­ள­தாக கம்­மன்­பி­ல­வினால் கூறப்­ப­டு­கின்­றது.

உண்­மையில் பீ /811/2023 எனும் கல்­முனை நீதிவான் நீதி­மன்றில் உள்ள வழக்­குக்கு அமை­யவே வெளி­நாட்டு பயணத் தடை விதிக்­கப்­பட்டு, இப்­போது அது நீக்­கப்­பட்­டுள்­ளது.

எனினும் அதன் பின்­னணி வித்­தி­யா­ச­மா­னது.
அசாத் மெள­லா­னா­வுக்கு எதி­ராக அவ­ரது மனைவி பொலிஸ் முறைப்­பா­டொன்றை செய்­தது, அனு­ர­கு­மார திசா­நா­யக்க அரசின் கீழ் அல்ல. கடந்த 2022 ஜன­வரி 30, பெப்­ர­வரி 22 ஆம் திக­தி­களில் இரு முறைப்­பா­டுகள் சாய்ந்­த­ம­ருது பொலிஸ் நிலை­யத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. அது அசாத் மெள­லானா கைவிட்டு சென்­றமை, மஹ­ராக மறுக்­கப்­பட்ட காசோலை வழங்­கி­யமை போன்ற‌ விட­யங்­களை மைய­ப்­படுத்­தி­ய­தாகும்.
இந்த முறைப்­பா­டுகள் குறித்து உரிய விசா­ர­ணைகள் எதுவும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. காரணம், அப்­போது ஆட்­சியில் இருந்த கோட்டா அர­சாங்­கத்­தோடு அசாத் மெள­லா­ன­ாவுக்கு இருந்த தொடர்­பு­க­ளாகும்.

அதன் பின்னர் 2022 மார்ச் 2 ஆம் திகதி குறித்த பெண், உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­ருக்கும் மே 18 ஆம் திகதி அம்­பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ருக்கும் முறைப்­பாடு செய்து எதுவும் நட­க்காத நிலை­யி­லேயே, செனல் 4 தொலைக்­காட்­சியில் அசாத் மெள­லா­னாவின் ஆவ­ணப்­படம் வெளி­யா­னது.

இத­னைத்­தொ­டர்ந்து, அந்த படத்தில் தோன்­றி­யவர் அசாத் மெள­லானா என அவ­ரது மனைவி என கூறும் பெண் அம்­பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ருக்கு சென்று தெரி­வித்த பின்­ன­ரேயே, அம்­பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சரின் ஆலோ­சனைப் பிர­காரம் கடந்த 2023 செப்­டம்பர் 11 ஆம் திகதி அசாத் மெள­லானா மீது குற்­ற‌ச்­சாட்டு சுமத்­தப்­பட்டு உடன் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு, கல்­முனை நீதிவான் நீதி­மன்­றுக்கு அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வ­ழக்­கி­லேயே வெளி­நாட்டு பயணத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த விட­யங்­களை ஆராயும் போது, அசாத் மெள­லானா பிள்­ளை­யா­னுடன் இணக்­கத்தில் இருந்த போது அவர் பொலி­சா­ரிடம் இருந்து காப்­பாற்­றப்­பட்­டுள்ள நிலையில், செனல் 4 காணொ­ளியின் பின்னர் அவரை கைது செய்ய பொலிஸார் யாரோ ஒரு­வரின் தேவைக்­காக முயற்­சித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான நிலையில், செனல் 4 காணொளி தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளதால், அசாத் மெள­லானா வர­வ­ழைக்­கப்­பட்டு வாக்கு மூலம் பெறப்­ப­டலாம் என்­பதால், அந்த நட­வ­டிக்­கை­களை தடுக்கும் முயற்­சி­யா­கவே கம்­மன்­பில போன்­ற­வர்கள் தேவை­யற்ற விட­யங்­களை, உண்­மை­களை மறைத்து பேசுவதாக தோன்றுகின்றது.

உண்மையில் அசாத் மெளலானா கடந்த 2022 ஜனவரி மாதம் நாட்டை விட்டு வெளியேறியதாகவே தகவல்கள் உள்ளன. அப்படியாயின் அவர் ஐரோப்பிய நாடொன்றில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ள பின்னணியில், அவர் மீள நாட்டுக்கு திரும்புவார் என எதிர்ப்பார்ப்பது கடினமாகும்.

எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் உள‌வுத்துறை பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபயவை கைது செய்ய அல்லது அவர்களின் வகிபாகம் குறித்து விரிவான விசாரணைகள் தொடர வேண்டும்.-  

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top