Headlines
Loading...
ஏழையைவைத்து பிரபலம் தேடும் மா.உறுப்பினர்!

ஏழையைவைத்து பிரபலம் தேடும் மா.உறுப்பினர்!



உதவி செய்வதை மறைத்து செய்யச் சொல்லிய இஸ்லாமிய மார்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒரு உதவியை செய்துவிட்டு அதனை படம் பிடித்து இணையத்தளங்களிலும் முகப்புத்தகத்திலும் போட்டு பிரபலம் தேடிக்கொண்டிருக்கிறோம்.

இன்று ஒரு செய்தி எமது இணையத்தின் மின்னஞ்சலுக்கு கிடைக்கப்பெற்றது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் இன் உதவியினை பெற்ற ஏழைத்தொழிலாளியின் புகைப்படமும் உதவியை கைளித்தபோது எடுத்த புகைப்படமும் எனது நெஞ்சை உருக்கியது.

 ஏழையாக பிறந்துவிடக்கூடாது காரணம் ஏழை என்ற காரணத்தை வைத்து அரசியல் வியாபாரிகள் நமது வீட்டு கதவுகளை அடிக்கடி தட்டுவர். குழாய்கிணறுகள், நீர்ப்பம்பிகள், தையல் மெசின்கள் கேஸ் சிலிண்டர்கள் என்று தருவதற்காக அடிக்கடி வீடுகளுக்கு வருவர் எம்மை படம் பிடிப்பர் எங்கள் பெண்பிள்ளைகளின் போட்டோக்கள் சவூதியிலும், இன்னோரன்ன அமைப்புகளின் நோட்டிஸ் போடிலும், பேஸ்புக்கிலும், இணையத்தளங்களிலும் வந்திருக்கும் அப்போது அந்த உதவியை ஏன் பெற்றோம் என்ற கவலை எங்களை ஆட்கொள்ளும் என்று கண்ணீர் மல்கினார் அப்துல்லாஹ், (அப்துல்லாஹ் என்பவர் ஒரு அமைப்பின் உதவியை பெற்ற ஒரு பெண்ணின் தந்தை)

மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் குறித்த நல்ல எண்ணம் எனது மனதுக்குள் இருந்தது, ஒரு துவிச்சக்கர வண்டி திருத்தும் ஏழைக்கு உதவி விட்டு அதனை வைதது ஊடக பிரபலம் தேடும் உறுப்பினர் எதிர்காலத்தில் இப்படியான செயல்களை செய்யமாட்டார் என நம்புகிறேன்.