Headlines
Loading...
நாங்கள் என்ன தவறு செய்தோம் – ஒரு துன்பியல் நிகழ்வின் பதிவு!

நாங்கள் என்ன தவறு செய்தோம் – ஒரு துன்பியல் நிகழ்வின் பதிவு!



பஹத் ஏ.மஜீத்

யாழ்ப்பாண முஸ்லிகளின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக முஸ் லிம்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறி தலைமுறை தலை முறையாக பெயரோடும் புக ழோடும் வாழ்ந்து வந்தார்கள். முன்னொரு காலத்தில் கோட்டை பிர தேசத்திலும் நல்லூர் பகுதியிலும் குடி யிருந்ததனை வரலாற்று ஆய்வு நூல்கள் குறிப்பிடுகிறது.
இதன் பிற்பாடு தங்களின் மத அனுஸ்டானம், வியாபார, கல்வி தேவைகளுக்காக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து சென்றதும், இறுதியாக சோனக தெரு எனப்படும் பிரதேசத்தில் நிலைகொண்டு வாழ்ந்து வந்ததை வரலாற்று ஆய்வு நூல்கள் குறிப்பிடுகின்றன.
வடக்கே ஓட்டுமடம், தெற்கே கொட்டடி, கிழக்கே வண்ணார்பண்ணை, மேற்கே நாவாந்துறை என்னும் பகுதிகளால் சூழப்பட்டு யாழ்.மாநகர சபையின் 19ஆம், 21ஆம் வட்டாரங்களை முழுமையாகவும், 20ஆம் வட்டாரத்தை பகுதியாகவும் உள்ளடக்கிய பிரதேசமே சோனகத்தெரு. தமிழ் சகோதரர்களால் சூழப்பட்டுள்ள இப்பிரதேசத்தில் 14க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும் 6 பாடசாலைகளும் அமைந்திருந்தன. இப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் மக்களோடு அன்போடும், ஆதரவோடும் சுமூகநிலையில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர்.
கல்வி, கலாச்சாரம் மற்றும் சமய விட யங்களிலும் தமிழ் மக்களுக்கு முஸ்லிம் மக்க ளும், முஸ்லிம்களுக்கு தமிழரும் உதவியாக இருந்தனர். ஏன் முஸ்லிம் பெண்களை தமிழ ரும், தமிழ் பெண்ணை முஸ்லிம்களும் திரு மணம் செய்தும் இருந்தனர். இன்றும் திரு மண கலாச்சாரங்களில் தமிழரின் மரபு முஸ் லிம்களிடத்தில் காணப்படுகின்றமையினை அவதானிக்க கூடியதாய் இருக்கிறது.

இனத்திற்கான போராட்டம், உரிமை களுக்கான போராட்டம், சிங்கள தேசத்துக் கெதிரான போராட்டம் என்று பலவிதத்தில் கூறப்பபடும் தமிழ் ஈழம் என்ற தனி நாட்டை அமைப்பதற்கான அரசியல் பேராட்டம், விடுதலைப்புலி இயக்கத்தினால் கொண்டுவரப்பட்டது. இதனை தமிழ் அரசியல்தலைமைகளே தோற்றுவித்தும் விட்டது. வெறும் கோசங்களாக உரு வெடுக்காமல் குண்டுகளும், துப்பாக்கிகளும் மட்டுமே பேசின.

தமிழை தாய்மொழியாக கொண்ட முஸ்லிம்களும் இப்போராட்டத்திற்கு உரம்போட்டனர் உயிரையும் விட்டனர்.
வெறுமனே வியாபரத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் பணத்தாலும் பலத்தாலும் விடுதலைப்புலிகளுக்கு உதவினர். இதனை யாராரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. ஒரு சிலர் சிங்கள தேசத்திடம் காட்டிக்கொடுக்கவும் செய்தனர். ஒரு சிலரின் செயற்பாடுகளை ஒட்டுமொத்த முஸ்லிம்களின் செயற்பாடாக கருதிய புலிகள் ஒரு சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களையும் துரோகிகளாக பார்த்தனர்.

முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர், சுடப்பட்டனர். இப்படி நடந்து கொண்டிரு க்கையில் இதற்கான முழுத்தீர்வு ஒன்றி னை பெறுவதற்காய் விடுதலைப்புலிகள் காத்திருருந்தனர்.

1990ஆம் ஆண்டு அக்டோபர் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக நல் ல நாளாகவே உதயமாகியது. ஆனால் யாழ். வாழ் முஸ்லிம்களுக்கு முஸ்லிம்கள் வாழும் பகுதி புலி இயக்கத்தினரால் அதிகாலையே முற்றுகையிடப்பட்டது. ஆண்கள் அனைவரும் ஜின்னா மைதா னத்திற்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஈழ மண்ணை| விட்டு வெளியேற வேண்டும் என அறிவித்து முஸ்லிம் பகுதியிலிருந்து போக்குவரத்து செய்யும் வீதிகளனை த்தும் மூடப்பட்டு ஐந்து சந்தி பாதையால் மட்டும் வெளியேற அனுதிக்கப்பட்டனர்.

வெளியேறும் போது பணம் தங்க நகை யாவும் சோதனையிடப்பட்டு அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு சகல சொத் துக்களையும் இழந்து வெறும் கையுடன் சங்குப்பிட்டி கேரதீவு வழியாக விரட்ட ப்பட்டனர், வெளியேற்றப்பட்டனர். வேளி யேற்றப்பட்ட யாழ். முஸ்லிம்கள் தென் பகுதிகளில் அகதிகளாக முகாம்களிலும் நண்பர்கள், உறவினர் வீடுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.

வீடில்லை, தொழில் இல்லை எனவே உடை இல்லை, உணவு இல்லை என அல்லற்பட்டனர். உறவுகள் பிரிக்கப்ப ட்டன. ஒருவர் புத்தளத்தில் அவரது சகோதரர் பேருவளையில் என குடும்ப ங்கள் சிதறுண்டன

2001 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின் யாழ். முஸ்லிம்கள் மிகச் சிலர் மீண்டும் தமது சொந்த இடத்திற்குச் சென்று வியாபார முயற்சி களில் ஈடுபட்டனர். வீடுகளை புனர மைத்து அப்பகுதியில் தற்கா லிகமாக குடியமர்ந்தனர்.
ஒஸ்மானியா கல்லூரியும் மீளத் திறக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்பு சிலர் குடும்பங்க ளாகச் சென்று வாழ்கின்றனர். ஓஸ்மா னியக் கல்லூரியிலும் மாணவர் தொகை அதிகரித்துள்ளது.

வெளியேற்றப்பட்ட போது குடும்பங்கள் 2700 என அமைந்திருந்தது.
இன்று அவை 8000 என பெருகியுள்ளது. ஆனால் 500 குடும்பங்கள் கூட இதுவரை யாழில் நிரந்தரமாக மீளக் குடியேற வில்லை.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் விவகாரத்தில் இது வரை, எந்த வொரு அரசாங்கமும் போதி யளவு கரிசனைகளை வெளிப்ப டுத்தவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
வடக்கிலிருந்து வெளி யேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற மானது, இறுதி யுத்தத்தில் இடம்பெ யர்ந்த தமிழ் மக்களுக்கு முன்ன ராக அல்லது ஆகக்குறைந்தது அவர்களு டனாவது இடம்பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், அது நிகழவில்லை.வடக்கு முஸ்லிம்களுக்கு புலிகளால் புரியப்பட்ட அநீதி மற்றும் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கான மறுவாழ்வு குறித்த விடயங்களில், முஸ்லிம் தலைமைகள் ஆகக் குறைந்தளவுகூட அக்கறை காட்வில்லை என்பது இன்னொருபக்கம் கசக்கின்ற உண்மையாகும்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதி கள்கூட, அந்த மக்களின் மறுவாழ்வு க்காகச் செய்தவற்றினை விடவும், செய்த தாகக் சொல்லிக் கொண்டு நடத்திய அரசியல்தான் அதிகமாகும்.

வடக்கு முஸ்லிம்களை மீள்குடியே ற்றுவதில் வட மாகாணசபைக்கு மிகப்பெரும் பொறுப்புள்ளது. ஆனால், அவர்களின் மௌனத்தினால் அதை அவர்கள் தட்டிக்கழித்துக்கொண்டே வருகின்றனர்.

இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்கள் மீது புரியப்பட்டது ‘இனப்படுகொலை’தான் என்று, வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, வடக்கிலிருந்து முஸ்லிம்களை புலிகள் விரட்டிய டித்தமையினையும் ‘இனச்சுத்திகரிப்பு’ என்று ஏற்றுக்கொண்டு, தீர்மான மொன்றினை நிறைவேற்றுமாறு, வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால், அது தொடர்பில் வடக்கு மாகாணசபை அலட்டிக்கொள்ளவேயில்லை.வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஏராளமான விடயங்கள் உள்ளன.

தமது மண்ணை, இதுவரை கண்ணால் பார்க்காமலேயே, ஒரு தலைமுறை அந்த மண்ணுக்கு வெளியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது, எத்தனை துயரமானது.