Headlines
Loading...
சேவல் கூவுகிறது என பொட்டைக்கோழியும் கூவத்தொடங்கியுள்ளது

சேவல் கூவுகிறது என பொட்டைக்கோழியும் கூவத்தொடங்கியுள்ளது



எம்.எச்.முஸ்தாக் முஹம்மட்

முஸ்லிம் தேச அரசியல் வாதிகளின் இயலாமைகளும் போக்கிரித்தனங்களும் சமூகத்தின் உரிமை அரசியலை விலைக்கு விற்று வயிறு வளர்த்த துரோகங்களையும் அவர்கள் மேடை போட்டு அவர்களையே பிராயச்சித்தம் தேட வைத்துள்ளான் இறைவன்கை கட்டி வாய் பொத்தி குனிந்து நின்று கைகொஞ்சி சாப்பாடு கொடுத்து அரசியல் வாதிகள் என் வீட்டு வாசல் படி வந்தார்கள் என பெருமை கதைத்து மனைவியிடம் கம்பீர போராளி என்ற கர்வங்கள் மெதுவாக இப்போது போராளிகளிடமிருந்து இறக்கிவைக்கப்பட்டுள்ளது.

பிரிவுகளும் - பிளவுகளும் முன்னைய காலங்களை விட இப்போது கனதியாகிக்கிடக்கிறதுஅப்போது பேரியல் அஷ்ரஃப் அதாஉல்லாஹ் றிஷாட் பதியுதீன் ஹிஸ்புல்லாஹ் போன்றோர்களின் பிளவுகள் எல்லாம் தலைவர் பதவி அமைச்சு பதவிப் போராட்டம் என சித்தரிக்கப்பட்டனஆனால் இப்போதுதான் புரிகிறது முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை அவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொடுத்தவர்களுக்கு உரிமையும் இல்லை சலுகையும் இல்லை என எதனையும் அடையவுமில்லை.

சமூக போராட்டத்தில் கரையோர மாவட்டக் கோரிக்கையை ஒப்பந்தங்களில் முன்வரியில் எழுதி பின் வரிகளில் அவர்களுக்குள் அவர்களாகவே பங்கு போட எழுதப்பட்ட அதிகாரப்பதவிகளும் தேர்தல் கால செலவுகளாக காட்டப்பட்ட கோடிக்குள் மறைந்து போன கோரிக்கைகள் என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர்.

கூட்டம் கனதியாகி முஸ்லிம் சமூக அரசியலின் அசிங்கங்கள் பலரை துரோகியாக்கிவிட்டுள்ளதுசிலரை கசக்கியும் சில்லறைகளின் வாழ்க்கைகள் பிரிந்து விடும் என என்னும் அளவுக்கு பெண்கள் மத்தியிலும் இளைஞர்களினதும் பேசுபொருளாகிப்போன கதைகள் சொல்லி வைக்கின்றன.

 கடந்த காலத்திலிருந்து கற்ற கசப்புக்களை களைந்து புதிய அரசியல் முகவரி தேடும் அரசியலை கட்டமைக்க அதாஉல்லாஹ் அறை கூவல் விடுத்தார் இது மாத்திரம் போதாது ஹிஸ்புல்லாஹ் றிஷாட்பதியுதீன் ஹசனலி பஸீர்சேகுதாவுத் போன்றோரின் குரலும் மக்களுக்குள் ஆழமாக கேட்க வேண்டும் என சமூகம் காத்துக்கிடக்கையில் சேவல் கூவினால் எழும்பி நடக்க வேண்டிய பொட்டைக்கோழியும் கூவத்தொடங்கியுள்ளது பொழுது விடியாத கூவல் என்றாலும் அக்கூவலுக்கு கொக்கரிக்கிறார்கள்  காலம் அறியா கோலங்களை சுமக்கும் கூகுள் முகநுால் செய்திக்கும்மாள தம்பிமார்!!  தம்பிமாரேஉங்களை நீங்களே விடுதலை செய்யுங்கள்!!

வரலாற்றை படியுங்கள் அடுத்த தலைமுறைக்கு பாடமாகுங்கள் பகிடியாகி விடாதீர்கள்.!!

வரலாறு என்பது இரு பக்கவிளைவுகளில் இருந்து அறிந்து கொள்வது.

வரலாற்றில் சிலதுகள் 01

அதாஉல்லாஹ்வுக்கு அந்தஸ்துள்ள அமைச்சை கொடுக்க வேண்டாம் என்று தலைவர் றவுப் ஹக்கீமிடம்2001ம் ஆண்டு அடம் பிடித்தவர்கள்தான் ஹரீஸீம் அன்வர் இஸ்மாயிலும் அதனால்தான் 02 கபினட் அமைச்சுப்பதவிக்கு பெயர் குறிப்பிட்டு அனுப்புமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டதற்கு தலைவர்  அவர் பெயரை மாத்திரம் எழுதி அனுப்பினார்.
பின்னர் இரண்டு அமைச்சு கிடைத்தும் அதனை தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியை ஹரீஸீம் அன்வர் இஸ்மாயிலும்தான் அதாஉல்லாஹ்வுக்கு எத்திவைத்தார்கள்அதன் பின்னரே அதாஉல்லாஹ் விசாரித்து உண்மைத்தன்மையை அறிந்து கொண்டு தலைவர்  மீது கசப்புக்கொண்டார்.

ஹரீஸ் அன்வர் இஸ்மாயிலின் பாராளுமன்ற பகிஸ்கரிப்பை வைத்து அதாஉல்லாஹ் அரசியல் நாடகம் நடாத்தி அமைச்சு பதவி எடுத்தார் என்பது வரலாற்றுத்தவறு 2001ம் ஆண்டு சந்திரிக்கா அரசை கலைத்து பாராளுமன்ற தேர்தலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் மர்ஹீம் றிஸ்வி சின்னலெவ்வையின் வீட்டையே முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயமாக்கி பணிகள் முன்னெடுக்கப்பட்டன அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களான பேரியல் அஷ்ரஃப்பும் மர்ஹீம் தொப்பி முகைதீனும் சந்திரிகா அரசில் ஒட்டிக் கொண்டார்கள்.எஞ்சியது அதாஉல்லாஹ் மாத்திரமே ஓரே நிச்சயிக்கப்பட்ட வேட்பாளர் ஆனால் கல்முனைத்தொகுதிக்கு யார்?அப்போது கட்சியின் மூத்ததுணைத்தலைவர் டாக்டர் ஏ.உதுமாலெவ்வையைத் தவிர வேறு யாருமில்லை சம்மாந்துறைத்தொகுதிக்கு மர்ஹீம் அன்வர் இஸ்மாயில் என்பதுவே கட்சிக்குள் கதை டாக்டர் ஏ.உதுமாலெவ்வையும் மர்ஹீம் அன்வர் இஸ்மாயிலும் தன்னைத்தான் வேட்பாளர்களாக பிரகடனம் செய்து கொண்டு தேர்தல் களம் நோக்கிய பயணத்துக்கான போஸ்டர் வடிவமைப்பு தலைவர் அஷ்ரஃப் அவர்களைப்பற்றிப்பேசிய பேச்சுக்களின் தொகுப்புக்களை தேடி தாறுஸ்ஸலாத்துக்கு படை எடுத்த வண்ணமே இருந்தனர்ஓர் இரவு திடீரென வேட்பாளர் தெரிவு மர்ஹீம் றிஸ்வி சின்னலெவ்வையின் வீட்டில் நடப்பதாக தகவல் பரவியது அங்கு சென்றதுமே பலர் அநியாயம் என்றனர் சிலர் நியாயம் என்றார்கள் சம்மாந்துறைத்தொகுதிக்கு மர்ஹீம் அன்வர் இஸ்மாயிலை எதிர்த்து மன்சூர் தன்னை வேட்பாளராக போட வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றார்பின்னர் மூன்று தடவைகள் தலைவர் துண்டு குலுக்கிப்பபோட்டும் மன்சூர் தெரிவாகியும் அதாஉல்லாஹ்வும் தலைவரும் சேர்ந்து மர்ஹீம் அன்வர் இஸ்மாயிலை வேட்பாளராக்கினார்கள்மர்ஹீம் அன்வர் இஸ்மாயில் தலைவர் அஷ்ரஃப்பின் கனவில் இருந்த அரசியல் வாரிசு என்பது எல்லோருக்கும் தெரியும்சம்மாந்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கட்டியம் கூறியவர்அது மாத்திரமல்ல அதாஉல்லாஹ்வின் நெருங்கிய நண்பர் என்பதால் அது நடந்து விட்டது அப்போதெல்லாம் தலைவரின் தனித்துவ முடிவுகள் எடுக்கப்படவில்லை புதிய தலைவர்தானேபின்னர் கல்முனைத்தொகுதிக்கு கட்சியின் மூத்ததுணைத்தலைவர் டாக்டர் ஏ.உதுமாலெவ்வையை எதிர்த்து தன்னை வேட்பாளராக்குமாறு ஹரீஸ் தனது சகோதரன் அமீர் அலியின் துணையுடன் வந்தார்அது வேகமான பேச்சாக யாரும் கணக்கெடுக்கவில்லைடாக்டர் ஏ.உதுமாலெவ்வையோடு தன்டிக்கு இவரால் முடியாது என்ற போதும் ஒரு அசிப்பும் இல்லாது ஹரீஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்புதியவர் இளையவர் என்பதை விடவும் ஹர்த்தால் கடையடைப்பு எனவும் கல்முனை பள்ளிவாசல்கள் தோறும் கைக்குரியதான ஒலி பெருக்கிகளை வைத்து மக்களை கூட்டி தமிழ் பாசிச போராட்டத்திற்கு எதிரான வன்மம் மிக்க குரலாக தன்னை அடையாளப்படுத்தி தற்போது 40 வயதை தாண்டியவர்களை அப்போதைய இளைஞர்களாக காட்டி மெஸ்ரோ என்ற அமைப்பை தோற்றிவித்து கல்முனை அமானா வங்கி முன்னால் உள்ள வீதியில் காரியாலயம் ஒன்றை நிறுவி அதற்கு அடிக்கடி தலைவரையும் அதாஉல்லாஹ்வையும் அழைத்து காதுக்குள் ஓதி தன்னை முஸ்லிம் சமூக உரிமைப்போராளி எனப்படம் காட்டிய  ஹரீஸீம் மற்றும் மர்ஹீம் அன்வர் இஸ்மாயிலும் 2001ம் ஆண்டு எம்.பி யானார்கள் அன்று அதாஉல்லாஹ் யார் இந்த ஹரீஸ்டாக்டர் ஏ.உதுமாலெவ்வையை விடவாதலைவர் அஷ்ரஃப் தாங்கிய கல்முனை மண்ணை தாங்குவாராஎனக் கேட்டிருந்தால் விலாசமே இல்லாது போய் இருப்பார் இந்த ஹரீஸ்.

மீண்டும் 2004ம் ஆண்டு தனித்தரப்பை ஹக்கீம் உறுதிப்படுத்தவில்லை என அதாஉல்லாஹ்வோடு வெளியேறிய ஹரீஸ் அம்பாறை மாவட்டத்தில் பொது முன்னணியில் வேட்புமனுத்தாக்கல் செய்து விட்டு அப்போது அதாஉல்லாஹ்வும் ஹரீஸீம் பேரியல் அஷ்ரஃப்பும் வேட்பாளர்கள் களச் சூழல் மூன்று பேரும் எம்.பி எனச் சொன்னது இவர்களை எதிர்த்து தலைவர் றவுப்ஹக்கீமும் அம்பாரை மாவட்டத்தில் போட்டிக்கு வந்து விட்டார்களம் சாதகம் இல்லை என்பதை உணர்ந்த தலைவர் தனது அரசியல் சாணக்கியத்தைக் கொண்டு ஹரீஸின் தலையில் மிளகை அரைக்கத்துணிந்தார்.

தனது விசுவாசியும் ஹரிஸின் அரசியல் தோழர்களான இரு இளைஞர்களை ஹரீஸிடம் துாது அனுப்பினார்.அவர்கள் கொழும்பு தெஹிவலை சந்தியில் இருந்த தர்பார் ஹோட்டலில் பேச்சு வார்த்தைஇது நடக்கிறதா?எனக்கண்காணிக்க ஹரிஸின் அரசியல் தோழர்களான இரு இளைஞர்களின் தோழர்களும் அவர்களுடன் அவர்களுக்கு தெரியாமல் அமர்த்தப்பட்டதுதான் தலைவரின் அரசியல் சாணாக்கியம்தேர்தல் களத்துக்கு ஹரீஸ் வரக்கூடாது அதாஉல்லாஹ்வையும் பேரியல் அஷ்ரஃப்பும் தோற்க்கடிக்கப்பட்டால் ஹரீஸீக்கு தேசிய பட்டியலும் ஓர் அமைச்சும் நம்பலாம்தானே!!

.தே.கட்சி 04 தேசியப்பட்டியல் தருவதாக உள்ளது ஹரீஸ் நம்பினார் கல்முனைக்கே வராது தெஹிவலையில் தங்கினார்ஹரீஸின் தோழர்களும் துறைமுக அதிகாரசபையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களும் ஹரீஸீடனே தங்கவைக்கப்பட்டனர்ஹரீஸை கூட்டி வருகிறேன் என அதாஉல்லாஹ்விடம் சொல்லி விட்டுப்போன தேசியப்பட்டியல் வேட்பாளர் மர்ஹீம் அன்வர் இஸ்மாயில் தனியாகவே கொழும்பில் இருந்து அம்பாறைக்குத்திரும்பினார்.

2004ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு நாட்கள் நெருங்கிவிட்டன இன்னும்  05 நாட்க்களே உள்ள நிலையில் சாய்ந்தமருதில் எஸ்.நிஜாமுதீனை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸ் நடாத்திய மாபெரும் கூட்டத்தில் தலைவர் ஹரீஸ் வெளுத்து வாங்கப்பட்டார்தேர்தலுக்கு வேட்புமனுகொடுத்து விட்டு கொழும்பில் படுத்துறங்கும் தம்பி ஹரிஸ்……………………………………………………………………………………………………………………………முடிவு எப்படி இருக்கும்.

தலைவரின் சதுரங்க விளையாட்டில் பேரியலின் வெற்றியை கடைசித்தறுவாயில் ஹரிஸைக்கொண்டு தடுக்கலாம் என முடிவு எடுத்தார்அன்று இதனைக்கேட்ட ஹரீஸீக்கு தேசியப்பட்டியல் கனவு கலைந்தது.விடியும் முன்னரே பொட்டி படுக்கைகளுடன் ஹரீஸ் அம்பாரைக்கு வந்து சேர்ந்தார்ஹரீஸின் அரசியல் நண்பர்களை தலைவரிடம் துாது அனுப்பினார்அவர்கள் நிந்தவுர் பிரதான வீதியில் இஷ்ஹாக் ஹாஜியாரின் வீட்டில் தலைவரை சந்தித்தனர்தேசியப்பட்டியல் கொடுக்கத்தான் வேண்டும் என மல்லுக்கு நின்றனர்இதன் பின்னர் அவரால் வென்று கொள்ளமுடியாது என உரக்க ஒருவர் சொன்னார்இதனைக்கேட்டுக்கொண்டிருந்த தலைவர் தேசியப்பட்டியல் உத்தரவாதத்திற்கு பதிலாக ஹரிஸின் அரசியல் நண்பருக்கு லண்டன் பயணத்தை ஏற்ப்பாடு செய்கின்றேன்என வாக்குறுதி அளித்து என்னுடன் எனக்கு வேலை செய்யுங்கள் என்றார் தலைவர்.நண்பர்களை ஹரீஸ் ஊரிலும் காணவில்லை கொழும்பிலும் காணவில்லை.

 அப்போது களம் சொன்னது அதாஉல்லாஹ் வெல்வார் சேகு இஸ்ஸதீன் பேரியல் அஷ்ரஃப்பை ஆதரிக்கின்றமையால் கடைசி நேரத்தில் அதாஉல்லாஹ் அக்கரைப்பற்று மக்களிடம் விருப்பு வாக்கை தனக்கு அழித்து பேரியலுக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரகடனம் செய்வார்என அரசியல் ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் காத்துக் கிடந்தனர்அது நடக்கவே இல்லை அதாஉல்லாஹ்வும் பேரியல் அஷ்ரஃப்பும் வென்றார்கள் சேகுவும் தேசியப்பட்டியலில் எம்.பியாகி வென்றுகொண்டார்ஏன் அதாஉல்லாஹ் அந்த முடிவை எடுத்தார் என இதுவரை யாரும் ஆருடமாவது கூறவில்லைதலைவர் அஷ்ரஃப்பினால் பழிதீர்க்கப்பட்டோம் என நொந்தாலும் தலைவனை இழந்து விட்டேன் என அக்கரைப்பற்று செயின் பில்டிங்கில் சேகு அழுது புலம்பியதற்கு அஷ்ரஃப்பின் நுஆ கட்சி மூலம் அதாஉல்லாஹ் சேகுக்கு நன்றிக்கடன் தீர்த்தாராஇல்லை இஹ்லாசான அரசியலுக்கு வழி விட்டு தன்னை பழக்கிக் கொண்டாரா??