Headlines
Loading...
முஸ்லிம் விவாக சட்ட சீர்திருத்த சட்டம்; நாளை கூடுறது சலீம் மர்சூப் நீதியரசர் குழு

முஸ்லிம் விவாக சட்ட சீர்திருத்த சட்டம்; நாளை கூடுறது சலீம் மர்சூப் நீதியரசர் குழு



முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபார்சு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு எதிர்­வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடி, தயா­ரிக்­கப்­பட்­டுள்ள சிபா­ர்சுகள் தொடர்­பான அறிக்­கையை ஆரா­ய­வுள்­ளது.

சிபா­ர்சுகள் தொடர்­பாக குழு உறுப்­பி­னர்­களின் ஆலோ­ச­னை­களும், கருத்­து­களும் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட பின்பே இறுதி அறிக்கை தயா­ரிக்­கப்­படும் என குழுவின் தலைவர் ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தெரி­வித்தார்.

2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொற­கொ­ட­வினால் இந்­தக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது.

இதில் 18 பேர் அங்கம் வகிக்­கின்­றனர். உலமா சபையின் பிர­தி­நி­திகள், பெண்கள் அமைப்பின் பிர­தி­நி­திகள், சட்­டத்­த­ர­ணிகள், ஓய்­வு­பெற்ற நீதி­ப­திகள், புத்­தி­ஜீ­விகள் இதில் அடங்­கு­கின்­றனர்.

எதிர்­வரும் 19 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள கூட்­டத்தில் சட்­டத்­த­ரணி சிப்லி அஸீஸ், நீதி­பதிஏ.டப்­ளியு.ஏ.சலாம் ஆகியோர் கலந்து கொள்­ள­மாட்­டார்கள் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அவர்கள் இரு­வரும் வெளி­நாட்டுப் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருப்­பதால் சமுகமளிக்க முடியாது என அறிவித்துள்ளதுடன் குழு எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.