Headlines
Loading...
கல்முனை கரையோர மாவட்டம் ஒரு தேர்தல்கால உண்டியலாகும்.

கல்முனை கரையோர மாவட்டம் ஒரு தேர்தல்கால உண்டியலாகும்.



1961ம் ஆண்டுக்குமுன் அம்பாரை (அழகிய பாறை) என்ற நாமத்தில் இருந்த ஊரில் சுமார் 4000 த்திற்கு உட்பட்ட சிங்கள வாக்காளர்களே இருந்தனர். மல்வத்தையில் அம்பாரை என்ற பெயரில் ஒரு தமிழர் வாழ்கிறார். கல்லோயா அபிவிருத்தி, சீனிக் கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டமை போன்ற காரணங்களால் தென்னிலங்கை சிங்களவர்கள் அம்பாரையில் திட்டமிட்டு குவிக்கப்பட்டனர். அதன் பின்னணியாக 1961ல் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இருந்த நீலாவணைக்கு தென்புறமாகவும், தென்மேற்காகவுமிருந்த பகுதிகளுடன் சில சிங்கள பிரதேசங்களும் உள்வாங்கப்பட்டு அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. மு;ஸலிம்கள் பெரும்பான்மையாகவும், தமிழர்கள் இரண்டாவதாகவும் வாழ்ந்த அம்பாரை மாவட்டம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், அயலிலுள்ள சிங்கள கிராமங்களின் இணைப்பு ஆகிவற்றின் மூலம் திட்டமிட்டு பெரும்பான்மையாக்கப்படுகின்றது. தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாரை மாவட்டத்திற்கு பெரும்பான்மை சிங்களவரே அரசாங்க அதிபராக இருந்து வருகிறார். அதன் மாவட்ட செயலகம் ஆரம்பத்தில் உகனையிலும் பின் அம்பாரையிலும் இயங்குகிறது.
1987களில் மேலதிக மாவட்டசெயலாளராக நியமிக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த சகோதரர் மக்பூல் அவர்களும் தமிழ்ப்பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அம்பாரை மாவட்டத்தின் சிங்கள மொழி ஆதிக்கம், காணிவிடயங்களிலும், நிர்வாக விடயங்களிலும் காட்டப்படும் பாரபட்சம் என்பன அம்பாரை மாவட்டத்தின் கரையோரங்களுக்கு தனியான கரையோர மாவட்டத்தின் தேவையை உணர்த்தியது.
முதன்முதலாக கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கை அகில இலங்கை முஸ்லிம் லீக்கினால் 1977ல் ஜ.தே.க. விடம் கையளிக்கப்பட்டது. அதன் காரணமாக ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களால் நியமிக்கப்பட்ட மொறகொட எல்லை நிர்ணய ஆணைக்குழுவானது அம்பாரையில் கரையோர மாவட்டத்தை உருவாக்க சிபாரிசு செய்தது. அது பி. தயாரெத்ன அவர்களது எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. அக்கால கட்டத்தில் முஸ்லிம்களுக்கென தனியான அரசியல் கட்சி இருக்கவில்லை.
1978 முதல் 1994 வரை கல்முனையின் பா.உ.வாக இருந்த முன்னாள் வாத்தக வாணிப அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் கல்முனை வாசிகசாலை கட்டிடத்தில் அம்பாரை மாவட்ட செயலகத்தின் உபபிரிவை உருவாக்கினார். அது சிறிதுகாலம் இயங்கியது. பின் 2004ல் முன்னாள் அமைச்சா பேரியல் அஷ்ரப் அவர்களால் அதேவாசிகசாலை கட்டிடத்தில் சிறிதுகாலம் இயங்கியது. அதற்கு உயிரோட்ம் கொடுத்து செயல்படுத்த சக்தியற்ற வர்களாக நமது அரசியல்வாதிகள் பிரதேச சிந்தனை உள்ளவாகளாக இருந்தார்கள்.
1989ல் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் பா.உ.வாக தெரிவானபின் முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு பெரிய சிறிய தேர்தல்களின் போதும் இந்த கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கையை ஒரு தேர்தல்கால உண்டியலாகவே இன்றுவரை பாவித்து வருவது வரலாற்றுச்சான்றாகும்.
கல்முனை கரையோர மாவட்டத்தை அடைந்து கொள்ள மு.கா. வுக்கு பல சந்தாப்பங்கள் கிடைத்தது. அவைகள் எந்தச்சந்தர்ப்பதிலும் தலைவாகளால் கணக்கிலெடுக்கப்படவில்லை என்பது ஒரு பாரிய சமுகத்துரோகமாகும்.
1989ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறிமாவோ பண்டாரனாயகா அம்மையார் அவர்கள் முஸ்லிம் மாகாணத்தை குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் “சு. தந்திரக் கட்சியின் சதியின் கதை” எனும் தலைப்பில் புத்தகம் எழுதி இரவோடிரவாக 12% வெட்டுப்பள்ளியை 5% மாக மாற்றிய ஆர்.பிரேமதாசவுக்கு நடுநிலமை என்ற போர்வையில் ஆதரவு வழங்கினார். அந்த சந்தர்ப்பத்தில் கல்முனை கரையோர மாவட்டத்தை கேட்டுப் பெற்றிருக்கலாம். அதையும் செய்யவில்லை.
அடுத்த சந்தர்ப்பம் ஆர்.பிரேமதாச அவர்களுக்கு எதிராக பாராழுமன்றில் நம்பிக்கை இல்லா பிரேரணை வந்தபோது எல்.எல்.பி. பட்டம் இல்லாமல் சட்டக்கல்லூரி பட்டத்துடன் எல்.எல்.எம். பெறும் சந்தர்ப்பததை கேட்டுப் பெற்றார். அப்போதும் கரயோர மாவட்டத்தை கேட்டுப் பெற்றிருக்கலாம்; கேட்கவில்லை.
சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியை தனது ஒரேயொரு ஆசனத்தால் தக்கவைத்து சாதனை படைத்து, சோமவன்ச தேரருடன் தர்க்கம் செய்து பெருமை பாராட்டிய காலத்தில் தீகவாபி, வளத்தாப்பிட்டி போன்ற பகுதிகளை அபிவிருத்தி செய்ய செலவு செய்த பணத்திலும் காலத்திலும் சந்திரரிக்காவின் மூலம் அந்த கல்முனை கரையோர மாவட்டத்தை கேட்டு பெற்றிருக்கலாம்.
இவைகள் மர்ஹூம் அஷ்ரப் அவர்களது காலத்தில் கிடைத்த சந்தர்ப்பங்கள்.
மு.கா.வின் தற்போதைய தலைவர் ஹக்கீமின் காலத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தல்கள், பொதுத்தேர்தல்கள், மாகாணசபையிலும், மத்திய அரசிலும் ஆட்சியை தக்க வைக்க அரசுகளுக்கு உதவியவேளை பசிர் சேகுதாவூத் அவர்கள் அதிர்வில் வந்து தலா ஒரு கோடி ரூபாய் பெற்றுத்தந்ததாக கூறுகிறார். அப்போது இந்த கல்முனை மாவட்டத்தையூம் கூட கேட்டுப் பெற்றிருக்கலாம் அல்லவா? அடித்துக் கேட்கவேண்டிய சந்தர்ப்பங்களை விட்டுவிட்டு ஒவ்வொரு தேர்தலிலும் கல்முனை கரையோர மாவட்ட கோசத்தை உண்டியலாக குலுக்குவது ஒரு சமுகத்துரோகமாகாதா?
தொலமி வரைந்த உலக வரைபடத்தில் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கல்முனை குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் வர்த்தக மையங்களில் பிரதான இடத்தில் கல்முனை இருக்கின்றது. 1924ல் முதலாவது உலக மகா யுத்தத்தின்போது உருவாக்கப்பட் அவசரக் கச்சேரி மர்ஹூம் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களது தலைமையில் கல்முனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்பாரை மாவட்ட செயலகத்தின் மேலதிக காரியாலயம் இரண்டுமுறை கல்முனையில் இயங்கியுள்ளது. மேலும் 1956ஆம் ஆண்டு அம்பாரை மாவட்டத்தில் முதலாவது பட்டின சபையாகவும் அதனை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு நகர சபையாகவும் 2002 ஆம் ஆண்டு மாநகர சபையாகவும் தரமுயர்த்தப் பட்டது. இவைகள் கரையோர மாவட்டம் கல்மனையில் அமையவும் அதற்கு கல்முனை கரையோர மாவட்டம் என பெயர் வரவும் போதுமான காரணமாகும்.
13.02.2017ல் வெளியான விடிவெள்ளி பத்திரிகையில் “ஒலுவில் மாவட்ட கோரிக்கையை கையில் எடுக்கிறது அ.இ.ம.கா.” என்ற தலைப்பில் ஏ.பீர்முகம்மது அவர்களால் ஒரு புது கோசம் முன்வைக்கப்பட்டள்ளது. இக்கட்டுரை ஆடு அறுப்பதற்கு முன் எதையோ அறுக்கும் உணர்வை காட்டுகிறது. அக்கட்டுரையில் குறப்பிடப்பட்டுள்ள இலங்கை வரைபடத்தில் கல்முனையின் பெயர் குறிப்பிடப்படாமல் இருப்பது கட்டுரை ஆசிரியரின் மனோபாவத்தை வெளிப்படுத்தியுள்ளது.
தேவையற்ற ஒரு துறைமுகத்தால் பெறுமதியான நிலங்களை இளந்து சதா கடலில் கரையும் சிறிய ஒலுவில் கிராமத்தை கல்முனைப் பட்டினத்துடன் மோதவைக்கும் இச்செலானது சாய்ந்தமருது பிரதேசசபை கோசம் போல பல சமயற்காறர்கள் சேர்ந்து சூப்பை பழுதாக்கியதாக அமையாமல் விட்டால் போதும். அத்தோடு தீகவாபி முதல் ஒலுவில் வரையுள்ள பகுதிகளை தனி பிரதேச செயலகமாக மாற்றும் திட்டங்களை மறைமகமாக வைத்துள்ள சிங்கள பேரினவாதம் தனது கழுகுப் பார்வையை செலுத்துமுன் கல்முனை கரையோர மாவட்ட செயலகத்தை பெறுவது காலத்தின் தேவையாகும். அண்ணன் தம்பி சண்டை ஸ்பெயினை பறிகொடுத்தாற்போல இது ஆகிவிடக்கூடாது.
ஹாஜி நஸீர்
கல்முனை