Headlines
Loading...
நீதிமன்றத்தில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்

நீதிமன்றத்தில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்



புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தின் ஆதாரங்கள் உள்ள அறை உடைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கட்டடத்தின் கூரைகளை நீக்கி, குற்றவாளி / குற்றவாளிகள் ஆதாரங்கள் உள்ள அறையினுள் நுழைந்துள்ளனர் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இருப்பினும், குறித்த அறையிலிருந்து திருடப்பட்ட பொருட்கள் தொடர்பிலும் எந்த தகவல்களும் தற்போது வரையில் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால்,புத்தள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நுழைவதற்கு வெளியாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் உள்ள அறையில், புத்தள மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றத்தின் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நீதிமன்றத்திற்குள் புகுந்து 20 கிலோ கிராம் கஞ்சாவை கொள்ளையடித்த கில்லாடிகள்..
புத்தளம் நீதவான் நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியில் வழக்கு பொருட்கள் வைக்கப்படும் அறைக்குள் பிரவேசித்து அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ கிராம் கஞ்சா கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியில் பொருத்தப்பட்டுள்ள கூரை தகடுகளை உடைத்து உள்ளே சென்று கஞ்சாவை கொள்ளையிட்டுள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 25 கிலோ கஞ்சா தொகையில் சுமார் 20 கிலோ கிராம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.