Headlines
Loading...
அமெரிக்க குடிமகன்களை கைது செய்யும் வட கொரியா

அமெரிக்க குடிமகன்களை கைது செய்யும் வட கொரியா


வட கொரியாவை விட்டு வெளியேற முயன்ற நான்காவது அமெரிக்க குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார். வட கொரியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றி வந்த Kim Hak Song என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
குடியரசுக்கு எதிரான விரோத செயல்களை ஈடுபட்டு வந்துள்ளார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று வடகொரியாவை விட்டு செல்ல முயன்றபோது அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் வடகொரியாவில் 3 அமெரிக்க குடிமகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் நபர் உளவு பார்த்தாக கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நபர் ஒரு ஹோட்டலில் திருட முயன்றதாக கைது செய்யப்பட்டார்.
மூன்றாவது நபர், வட கொரியவை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அணு ஆயுத சோதனை பிரச்சனையால் அமெரிக்கா- வடகொரியா ஆகிய இருநாடுகளுக்கும் பகை ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க குடிமகன்கள் மீது வட கொரியா நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.