Headlines
Loading...
அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்




(எம்.ஜே.எம்.சஜீத்)

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (8) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் பைசல் காசீம் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஐ.எல். மாஹீர் உட்பட திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அக்கரைப்பற்று பிரதேசத்தில் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.