Headlines
Loading...
ஆப்கானின் காலா ஈ சால் மாவட்டம் மீண்டும் தலிபான் வசம் வீழ்ந்தது!

ஆப்கானின் காலா ஈ சால் மாவட்டம் மீண்டும் தலிபான் வசம் வீழ்ந்தது!




இரண்டு நாட்களாக இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைத்தரப்பினர் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள காலா ஈ சால் மாவட்டத்தில் இருந்து பின்வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது, இந்த மாவட்டம் முற்று முழுதாக தாலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்தும் வெளியேறி வருவதாக சர்வதேச செய்தி ஸ்தாபனங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த இரு நாட்களில் ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் படைத்தரப்பினர் வசம் இருந்த குண்டூஸ் மாகாணத்தின் காலா ஈ சால் நகரம் கடந்த 2015 செப்டம்பர் மற்றும் 2016 ஓக்டோபர் ஆகிய காலங்களில் தாலிபான்கள் கைப்பற்றியிருந்தனர்.
இருப்பினும், தற்போது இந்த நகரம் தாலிபான்களின் பூரண கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளதுடன், அரச படைத்தரப்பினர் பின்வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.