Headlines
Loading...
அஸ்மின் பதவியை விட்டுக்கொடுக்கமாட்டார்?

அஸ்மின் பதவியை விட்டுக்கொடுக்கமாட்டார்?




நான் தற்போது வகித்துவரும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பதவி மீளழைப்புத் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியிடமிருந்து மின்னஞ்சல் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நல்லாட்சி விழுமிய அரசியலை முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி அறிமுகம் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை ஸ்தாபிதம் செய்வதில் என்னுடைய பங்களிப்புக்களையும் வழங்கியவன் என்ற ரீதியில், தலைமைத்துவ சபை, அதன் கூட்டான தீர்மானங்களுக்கு கட்டுக்கப்பட்டு நடப்பது மிகவும் அவசியமானது என்பதில் நான் முழுமையான உடன்பாடு கொண்டிருக்கின்றேன்.

ஒரு தீர்மானம்; அது அமுலாகும் சூழ்நிலைகள்; அது மக்களின் மீது செலுத்தக்கூடிய செல்வாக்குகள் குறித்து ஒரு அரசியல்வாதியாக நாம் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது அவசியமாகும். அந்தவகையில் அறிவிக்கப்பட்டிருக்கின்ற தீர்மானம் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னமே; சமூக வலையத்தளங்களிலும், இணைய ஊடகங்களிலும் இது குறித்து முன்வைக்கப்பட்டுவரும் கருத்துப் பறிமாற்றங்கள் ஆரோக்கியமானவையாக எனக்குத் தோன்றவில்லை.

குறிப்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் எதிர்காலத்தை சிதைக்கின்றவகையில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன, அத்தோடு என்சார்ந்தும் பல்வேறு தனிப்பட்ட ரீதியிலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை, குரோதங்களைத் தீர்த்துக்கொள்கின்ற இடமாக இதனை எவரும் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று கூறிக்கொள்வதோடு.

இத்தீர்மானம் குறித்த எனது இறுதி முடிவை விரைவில் அறிவிப்பேன், அதற்கான நியாயாதிக்கங்களையும் தெளிவுபடுத்துவேன். அதுவரை வீணான தர்க்கங்களிலிருந்து தவிர்ந்துகொள்வது சிறப்பானது எனத் தாழ்மையோடு அனைத்து அன்பர்களையும் நண்பர்களையும் வேண்டி நிற்கின்றேன்.


அ.அஸ்மின்