என் ஜெயரட்னம்
பேருவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அழுத்கமை நகரில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதான மீன் வியாபாரி ஒருவருக்கும் நேற்று (22) இரவு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
அதனையடுத்து அழுத்கம நகரில்? பேருவளை பிரதேச சபை கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள ஐந்து மீன் கடைகள் மூடப்பட்டனவென களுத்துறை வலய பிரதான பொது சுகாதார பரிசோதகர் ரத்தன் ஜீவந்த சிங்கபாஹு தெரிவித்தார்
இதன் அடிப்படையில் களுத்துறை மற்றும் பேருவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று (22) பதிவான 20 பேர் உட்பட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கொழும்பு பேலியகொட மீன் வர்த்தக மையத்துடன் நேரடியாக தொடர்புகளைப் பேணிய லொறிச் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பிலும் மக்களிடையே பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
0 Comments